Advertisement

இட்லி கடை ஃபேமஸ் கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி பார்ப்போமா

By: vaithegi Tue, 15 Aug 2023 4:57:15 PM

இட்லி கடை ஃபேமஸ் கொத்தமல்லி சட்னி செய்வது எப்படி பார்ப்போமா

உணவு வகைகளிலே ஒரே உணவை நாம் வீட்டில் சமைக்கும் பொழுது ஒரு சுவையிலும் அதே உணவை கடைகளில் வாங்கி சாப்பிடும் போது வேறு ஒரு சுவையிலும் இருக்கும். இதை எப்படி செய்தாலுமே நிச்சயமாக வித்தியாசம் கட்டாயம் இருக்கும். இதற்குக் காரணம் அதில் சேர்க்கப்படும் பொருட்கள் தான்.

கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு -2 டீஸ்பூன், பச்சை மிளகாய் -2, காய்ந்த மிளகாய் – 4, பழுத்த தக்காளி -2, கொத்தமல்லி-1 கட்டு, கடுகு -1 டீஸ்பூன், உப்பு – 1 டீஸ்பூன், இஞ்சி -1 துண்டு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து.

செய்முறை விளக்கம்
இந்த சட்னி செய்ய முதலில் அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அதில் ஒரு டீஸ்பூன் கடலைப் பருப்பு, ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து பொரிய விடுங்கள். அதன் பிறகு அதில் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், இஞ்சி சேர்த்து மீண்டும் ஒரு முறை வதக்கிய பிறகு தக்காளி சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி சேர்த்த பிறகு அரை ஸ்பூன் உப்பையும் சேர்த்த பிறகு தக்காளி பாதி அளவு வதங்கும் வரை காத்திருங்கள்.

coriander,chutney,italian shop ,கொத்தமல்லி ,சட்னி ,இட்லி கடை

இவை எல்லாம் ஓரளவிற்கு வதங்கிய பிறகு கொத்தமல்லி கட்டை பிரித்து நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்த பிறகு தண்ணீர் இல்லாமல் வடித்து அதையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது கொத்தமல்லியும், தக்காளியும் சேர்ந்து நன்றாக வதங்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு இதை நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு மிக்ஸி ஜாரில் இதை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஒரு பவுலில் மாற்றி ஊற்றி விடுங்கள். இப்போது அடுப்பில் சின்ன தாளிப்பு கரண்டியை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொரிந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு 1 கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பின்பு இந்த தாளிப்பை சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள்.நல்ல சுவையான முருகன் இட்லி கடை கொத்துமல்லி சட்னி தயார். சுடச்சுட இட்லியுடன் இந்த சட்னி இருந்தால் போதும் எத்தனை இட்லி சாப்பிடலாம் .அந்த அளவிற்கு அதே சுவையுடன் அட்டகாசமாக இருக்கும்.

Tags :