Advertisement

முருங்கை கீரையை வைத்து சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம்

By: vaithegi Tue, 03 Oct 2023 4:35:23 PM

முருங்கை கீரையை வைத்து சாம்பார் வைப்பது எப்படி என்று பார்ப்போம்

இன்று பெரும்பாலானவர்கள் வீட்டில் எந்த மரம் இல்லையென்றாலும், முருங்கை மரம் காணப்படும். இந்த முருங்கை மரத்தின் அனைத்து பாகங்களுமே நாம் பயன்படுத்தக்கூடியது ஆகும். முருங்கை மரத்தின் இலை, தண்டு, வேர், பூ, காய் என அனைத்திலுமே வைட்டமின்கள, தாதுக்கள், ஆண்டிஆக்சிடென்ட்கள் என பல சத்துக்கள் உள்ளது.

தேவையானவை

துவரம்பருப்பு – 100 கிராம்
பூண்டு – 20 பல்
பெருங்காய தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
முருங்கை கீரை- 10 கொத்து
சின்ன வெங்காயம் – 100 கிராம்
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 2
குழம்பு மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
புளி – சிறிதளவு

sambar,drumstick and spinach ,சாம்பார் ,முருங்கை கீரை

செய்முறை

முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சாம்பாரை தயார் செய்வதற்கு முன்பதாகவே துவரம் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு குக்கரில் ஊற வைத்துள்ள துவரம் பருப்பு, பூண்டு 5 பல், பெருங்காயத்தூள் சிறிதளவு, மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி நான்கு விசிலுக்கு நன்கு பருப்பை அவிய விட வேண்டும்.

பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, சின்ன வெங்காயம், சீரகம், வரமிளகாய், பூண்டு, தக்காளி, கருவேப்பிலை இவற்றை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அவை பொன்னிறமாக வதங்கிய பின்பு அதனுள் குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும். சேர்த்து நன்கு கிளறிட வேண்டும்.

அதன் பின் பருப்பு அவித்த பின் வடித்து வைத்துள்ள தண்ணீரை சிறிதளவு சேர்த்து நன்கு கிளறி கொள்ள வேண்டும். பின்பு சின்ன நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து ஊற்ற வேண்டும். அதன் பின்பு நன்கு கிளறிவிட்டு அவித்து வைத்துள்ள பருப்பு கலவையை அதற்குள் சேர்த்து மேலும் நன்கு கிளற வேண்டும். அதனை 3 முதல் 4 நிமிடங்கள் வரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

அதன் பின் உருவி வைத்துள்ள முருங்கை கீரையை சேர்த்து 1 நிமிடம் மட்டும் கொதிக்க வைத்து இறக்கிவிட வேண்டும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் முருங்கைக்கீரையின் நிறம் மாறுபடும். எனவே ஒரு நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும். இப்போது சுவையான முருங்கைக்கீரை சாம்பார் தயார்.

Tags :
|