Advertisement

செம ருசியான நாகூர் கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்து பார்க்கலாமா!!!

By: Nagaraj Tue, 20 Sept 2022 6:42:39 PM

செம ருசியான நாகூர் கொத்து பரோட்டாவை வீட்டிலேயே செய்து பார்க்கலாமா!!!

சென்னை: எந்த வெளிநாடு போனாலும் நம்ம ஊரு நாகூர் கொத்து பரோட்டா போல வருமா. இதை எப்படிங்க செய்வது. இதோ உங்களுக்காக.
தேவையானவை
பரோட்டா – 2முட்டை – 2வெங்காயம் – 1தக்காளி – 2கறிவேப்பிலை – ஒரு கொத்துகொத்தமல்லித்தழை – ஒரு கொத்துமிளகுத்தூள் – ஒரு தேக்கரண்டிஎண்ணெய் – தேவையான அளவுஉப்பு – தேவையான அளவு

bunch of prota,tomato,onion,salt,egg ,கொத்து புரோட்டா, தக்காளி, வெங்காயம், உப்பு, முட்டை

செய்முறை:வெங்காயம். தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

அடுத்து பரோட்டாவை சிறுசிறு துண்டுகளாக பிய்த்துப் போட்டு லேசாக வதக்கவும். பின்னர் முட்டைகளை உடைத்து ஊற்றி, சிறிதளவு உப்பு (ஏற்கனவே பரோட்டாவில் உப்பு உள்ளது) சேர்த்து கட்டிபிடிக்காமல் நன்கு கிளறவும். பின்னர் மிளகு, நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக அடுப்பிலிருந்து இறக்கி வைத்து நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்க்கவும். சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும் நாகூர் கொத்து புரோட்டா ரெடி.

Tags :
|
|
|