Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் முடக்கத்தான் கீரை இட்லி

By: Nagaraj Wed, 26 Aug 2020 08:09:34 AM

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் முடக்கத்தான் கீரை இட்லி

இட்லி வகைகளில் பொடி இட்லி, சாம்பார் இட்லி எனப் பலவகைகள் உண்டு. அதன்படி மிகவும் ஆரோக்கியமான ஒரு இட்லி வகையினைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். முடக்கத்தான் கீரை இட்லி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

இட்லி அரிசி - 4 கப்,
உளுந்து – 3/4 கப்,
வெந்தயம் – 2 ஸ்பூன்,
முடக்கத்தான் கீரை - 2 கப்,
வாழை இலை - 1,
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

freeze spinach,itli,lentils,dill ,முடக்கத்தான் கீரை, இட்லி, உளுந்து, வெந்தயம்

செய்முறை: அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் தனித்தனிப் பாத்திரத்தில் 5 மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து இவை அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக அரைத்து முடக்கத்தான் கீரையையும் சேர்த்து அரைக்கவும்.

அடுத்து இதனுடன் உப்பு சேர்த்து பொங்கும் வரை விட்டு, அதன் பின்னர் இட்லித் தட்டில் வாழை இலையை வைத்து அதன்மேல் நல்லெண்ணெய் தடவி மாவை ஊற்றி வேகவிட்டு இறக்கவும்.
ஆரோக்கியமான முடக்கத்தான் இலை இட்லி ரெடி. உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது இந்த முடக்கத்தான் இட்லி. இது மூட்டுவலியை போக்கும் தன்மை கொண்டது. சிலருக்கு இதை தனியாக செய்து சாப்பிட பிடிக்காது என்பதால் இட்லியுடன் சேர்த்து செய்யலாம். இதனால் ஆரோக்கியமும் உயரும்.

Tags :
|