Advertisement

மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Tue, 28 Mar 2023 11:27:09 AM

மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள், குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவார்கள்.
நாம் அரிசி மாவில் அல்லது கோதுமை மாவில் வெல்லம் சேர்த்து அப்பம் செய்வோம். இது சற்று வித்தியாசமான சுவையுடன் அலாதியான ருசியுடன் இருக்கும் மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம். செய்து பாருங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையானவை :
மைதா மாவு - ஒரு கப்உப்பு சிறிதளவ - (2சிமிட்)சோடா உப்பு - கால் ஸ்பூன்சர்க்கரை - கால் கப்ஏலக்காய் - 4அரிசி மாவு - 2 ஸ்பூன்பால் - அரை கப்

 ,மதுரை ஸ்பெஷல், வெள்ளையப்பம், மாலை நேரம், ருசி, பால், சர்க்கரை

செய்முறை: சர்க்கரையை நான்கு ஏலக்காயுடன் சேர்த்து மிக்ஸியில் நைசாக பொடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மைதா மாவு ஒரு கப், உப்பு இரண்டு சிமிட்டு, சோடா உப்பு கால் ஸ்பூன், பொடித்த சர்க்கரை, அரிசி மாவு இரண்டு ஸ்பூன் (மொறுமொறுவென வருவதற்காக) சேர்த்து கையால் நன்கு கலந்து விட்டு தண்ணீர் சேர்க்காத பால் அரை கப் எடுத்து சிறிது சிறிதாக விட்டு மாவை போண்டா பதத்திற்கு பிசையவும்.

பொடித்த சர்க்கரை சேர்ப்பதால் நன்கு இளகி வரும். அத்துடன் பாலையும் சேர்த்து கலக்க சரியான போண்டா பதத்திற்கு பிசைந்து விடவும். வாணலியில் எண்ணெய்யை காய வைத்து நன்கு சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து இந்த இனிப்பு போண்டாக்களை எண்ணெயில் கிள்ளி போடவும். அல்லது ஒரு ஸ்பூனால் எடுத்து போடவும். சூப்பரான மதுரை ஸ்பெஷல் வெள்ளையப்பம் ரெடி.

இதனை மாலை நேர ஸ்நாக்ஸாக செய்து பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பி சாப்பிடுவார்கள். ஏன் பெரியவர்களும் தான் விரும்பி சாப்பிடுவார்கள். செய்து தான் பாருங்களேன்.

Tags :