Advertisement

வீட்டிலேயே எளிய முறையில் மைதா பட்டர் பிஸ்கெட் செய்முறை

By: Nagaraj Wed, 16 Sept 2020 09:07:19 AM

வீட்டிலேயே எளிய முறையில் மைதா பட்டர் பிஸ்கெட் செய்முறை

கடையில் இனி குழந்தைகளுக்கு பிஸ்கெட் காசு கொடுத்து வாங்க வேண்டியதில்லை. வீட்டிலேயே செய்து கொடுத்து அசத்தலாம். இப்போது நாம் சிம்பிளாக மைதா பட்டர் பிஸ்கெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

மைதா மாவு - 200 கிராம்,
வெண்ணெய் - 100 கிராம்,
பொடித்த சர்க்கரை - 75 கிராம்,
உப்பு, பேக்கிங் பவுடர் - தலா கால் டீஸ்பூன்.

maida butter,biscuits,sugar,mix ,மைதா பட்டர், பிஸ்கெட், சர்க்கரை, கலவை

செய்முறை: மைதா மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாகக் கலந்து சலித்துக் கொள்ளவும். வெண்ணெய், சர்க்கரை இரண்டையும் கலந்து கொள்ளவும்.

மைதா, பேக்கிங் பவுடர் கலவையை சேர்த்துக் கலந்து பிசைந்து கொள்ளவும். இந்த மாவை சப்பாத்தி கல்லில் வைத்து வட்டமாக தட்டி, பாட்டில் மூடி கொண்டு வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் நெய் தடவி, மைதாவை லேசாகத் தூவி இதனை தோசைக் கல்லில் வைத்து மூடி விடவும்.

20 நிமிடம் கழித்து வெளியே எடுத்தால் சுவையான மைதா பட்டர் பிஸ்கெட் ரெடி.

Tags :
|