Advertisement

குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிட குடைமிளகாய் ஆம்லெட் செய்து தாருங்கள்

By: Nagaraj Sat, 29 July 2023 8:21:21 PM

குழந்தைகள் கேட்டு வாங்கி சாப்பிட குடைமிளகாய் ஆம்லெட் செய்து தாருங்கள்

சென்னை: குடைமிளகாய் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதை வைத்து குழந்தைகள் மீண்டும், மீண்டும் கேட்டு சாப்பிடும் படி ஆம்லேட் செய்து கொடுங்கள்.


தேவையான பொருட்கள்
குடைமிளகாய் – 1முட்டை – 2வெங்காயம் – 1தக்காளி – 1 (விரும்பினால்)ப.மிளகாய் – 1துருவிய கேரட் – 2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்மிளகு – அரை ஸ்பூன்எண்ணெய் – தேவையான அளவு

fibre-rich,rich in vitamin c,snack , குடைமிளகாய் ஆம்லெட், குடைமிளகாய் வைட்டமின் சி, நார்ச்சத்து, நிறைந்தது

செய்முறை: தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கவும். மிளகாயின் மேல் மற்றும் கீழ் பகுதியை வெட்டி நடுவில் உள்ள விதையை நீக்கவும்.

பிறகு, வட்ட வடிவில் நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து அதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய குடைமிளகாயை போடவும். குடைமிளகாயை இருபுறமும் புரட்டவும், பின்னர் அடித்து வைத்துள்ள முட்டை கலவையை அதில் ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபுறம் திருப்பி இருபுறமும் திருப்பி மிதமான தீயில் வேக வைக்கவும். இப்போது சுவையான குடைமிளகாய் ஆம்லெட் ரெடி…

Tags :