Advertisement

சப்பாத்திக்கு குட்டீஸ் விரும்பி சாப்பிட சாக்லேட் சாஸ் செய்து கொடுங்கள்

By: Nagaraj Tue, 17 Oct 2023 06:46:45 AM

சப்பாத்திக்கு குட்டீஸ் விரும்பி சாப்பிட சாக்லேட் சாஸ் செய்து கொடுங்கள்

சென்னை: பிரெட், சப்பாத்திக்கு மசாலா, ஜாம் என்று தொட்டு சாப்பிட்டு இருப்பீர்கள். சாக்லேட் சாஸ் செய்து சாப்பிட்டு இருக்கீங்களா. அதை எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: காய்ச்சிய பால் - கால் கப், பிரெஷ் க்ரீம் - அரை கப், குக்கிங் சாக்லேட் - 100 கிராம்.

cooking chocolate,fresh cream,milk,bread,chapati. ,குக்கிங் சாக்லேட், பிரெஷ் க்ரீம், பால், பிரெட், சப்பாத்தி.

செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் பால், பிரெஷ் க்ரீம், குக்கிங் சாக்லேட் சேர்த்து நன்றாக கலந்துக் கொண்டே இருக்கவும். சாக்லேட் முழுவதுமாக கரையும் வரை கலந்துக் கொண்டே இருக்கவும்.

இந்த கலவை சிறிது கெட்டியான பதத்தில் இருக்கும்போது இறக்கிவிடவும். சுவையான சாக்லேட் சாஸ் ரெடி..! இதை பிரெட், சப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம். அருமையாக இருக்கும்.

Tags :
|
|