Advertisement

குடும்பத்தினர் விரும்பி சாப்பிட முளைக்கீரை பொரியல் செய்து தாருங்கள்

By: Nagaraj Thu, 02 Mar 2023 11:37:09 PM

குடும்பத்தினர் விரும்பி சாப்பிட முளைக்கீரை பொரியல் செய்து தாருங்கள்

சென்னை: முளைக்கீரைப் பொரியலை குடும்பத்தினர் விரும்பி சாப்பிடுவது போல் செய்வோம் வாங்க.

தேவையானவை:
முளைக்கீரை - 1 கட்டுதுருவிய தேங்காய்ப்பூ - முக்கால் கப்பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன்பச்சை மிளகாய் - 2கடுகு - ஒரு டீஸ்பூன்உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன்கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய், - தேவையான அளவு.

green chillies,curry leaves,coconut flower,radish ,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேங்காய்ப்பூ, முளைக்கீரை

செய்முறை: கீரையின் வேர் பகுதியை நீக்கிவிட்டு, நிறைய தண்ணீரில் முக்கி, கல் மண் போகும்படி இரண்டு முறை சுத்தம் செய்யவும். பின் தண்டையும் இலைகளையும் பொடிசா நறுக்கவும்.

அடுப்பில் கடாய் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சேர்க்கவும். பின் பச்சை மிளகாயை கிள்ளி போட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

பிறகு கீரையை போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கீரையிலிருந்தே தண்ணி வரும். கீரை வெந்து, தண்ணீரெல்லாம் வற்றியதும், தேங்காய்ப்பூ சேர்த்து ரெண்டு பிரட்டு பிரட்டி இறக்கவும். சத்து நிறைந்த முளைக்கீரைப் பொரியல் ரெடி!

Tags :