Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட ஆப்பிள் ரபடி செய்து தாருங்கள்

By: Nagaraj Wed, 08 June 2022 5:07:19 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட ஆப்பிள் ரபடி செய்து தாருங்கள்

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட வீட்டிலேயே சூப்பராக ஆப்பிள் ரபடி செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு பாயாசம், கீர் செய்து கொடுத்து இருப்பீங்க. வித்தியாசமாக ஆப்பிள் ரபடி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள் : ஆப்பிள் - 2, பால் - அரை லிட்டர், சர்க்கரை - ஒரு கப், பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்), ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரிப் பொடி - 2 டீஸ்பூன்.

apples,milk,almonds,cardamom,powder,cashews,sugar ,ஆப்பிள், பால், பாதாம், ஏலக்காய், தூள், முந்திரி, சர்க்கரை

செய்முறை: பாலை நன்கு காய்ச்சி வைக்கவும். ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். துருவிய ஆப்பிளை வெறும் கடாயில் சூடுபட கிளறவும். சர்க்கரை, பால் சேர்த்து, குறைவான தீயில் கொதிக்கவிடவும். திக்கான பதம் வந்ததும், பாதாம் துருவல், முந்திரிப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

இதை சூடாகவோ… குளிர வைத்தோ பரிமாறலாம். இப்போது சூப்பரான ஆப்பிள் ரபடி ரெடி. குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் உடலுக்கும் ஆரோக்கியம்.

Tags :
|
|
|