Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட பிரெட் பக்கோடா செய்து தாருங்கள்

By: Nagaraj Sat, 09 July 2022 7:54:11 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட பிரெட் பக்கோடா செய்து தாருங்கள்

சென்னை: மாலையில் பள்ளி முடித்து வரும் குழந்தைகள் விரும்பி ஏதாவது கேட்டால் சட்டென சுவையான பிரட் பக்கோடா ரொம்ப எளிதாக செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் – ஐந்து, பெரிய வெங்காயம் – இரண்டு, பச்சை மிளகாய் – மூன்று, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், சீரகம் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், கடலை மாவு – ரெண்டு டேபிள் ஸ்பூன்.

bread,baguette,kids,wacky,delicious ,பிரெட், பக்கோடா, குழந்தைகள், அசத்தல், சுவை

செய்முறை:பிரேட் பக்கோடா செய்வதற்கு முதலில் பிரட் துண்டுகள் ஐந்தை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த பிரட் துண்டுகளை சிறுசிறு துண்டுகளாக பிய்த்து சேருங்கள். இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நான்கைந்து துண்டுகளாக நறுக்கி சேருங்கள். காரத்திற்கு மூன்று பச்சை மிளகாயை காம்பு நீக்கி சேருங்கள்.

இப்போது மிக்ஸியை இயக்கி நன்கு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் எதுவும் சேர்த்து விடக்கூடாது என்பதையும் மறந்து விடாதீர்கள். அரை பட்ட பிரட் துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் போட்டு கைகளை கொண்டு நன்கு உதிர்த்து விட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் ரெண்டு டேபிள்ஸ்பூன் அளவிற்கு கடலை மாவு சேர்த்து கலந்து விடுங்கள்.
பின்னர் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி உதிர்த்து இந்த மாவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அளவிற்கு அரைத்து வைத்த இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து பெருங்காயத்தூள் கொஞ்சம் போல் தூவி கலந்து விடுங்கள்.

பின்னர் இந்த மாவு கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். ஃப்ளேவர் கொடுக்க கொஞ்சம் சீரகம் சேர்த்து நன்கு கைகளால் கலந்து விடுங்கள். பின்னர் கொஞ்சம் போல் தண்ணீர் தெளித்து கெட்டியாக உருண்டை பிடிக்கும் அளவிற்கு மாவை சரியான பதத்திற்கு கொண்டு வாருங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். பக்கோடா சுட்டு எடுப்பதற்கு தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க விடுங்கள்

எண்ணெய் கொதித்த பிறகு அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து மாவை கைகளால் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து சிறு சிறு உருண்டைகளாக போடுங்கள். மாவு இருபுறமும் நன்கு சிவக்க வெந்து வர வேண்டும். உட்புறம் நல்ல சாஃப்டாகவும், வெளிப்புறம் நன்கு மொறு மொறு என கிறிஸ்பியாகவும் இருக்கும் இந்த டேஸ்டியான பிரட் பக்கோடா நொடியில் தயாராகி விடும்.

Tags :
|
|
|