Advertisement

முந்திரி பர்பி செய்யுங்கள்... குடும்பத்தினர் பாராட்டை பெறுங்கள்

By: Nagaraj Sat, 08 Oct 2022 10:46:34 AM

முந்திரி பர்பி செய்யுங்கள்... குடும்பத்தினர் பாராட்டை பெறுங்கள்

சென்னை: குழந்தைகளுக்கு பர்ஃபி என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் முந்திரி பர்ஃபி என்றால் கேட்கவா வேண்டும். இதை வீட்டிலேயே எளிமையாக செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள் : முந்திரி - 1 டம்ளர் சர்க்கரை - 2 1/2 டம்ளர் நெய் - 1/4 டம்ளர் நீர் - 3/4 டம்ளர் ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி

cashews,ghee,sugar,health,cardamom,children ,முந்திரி, நெய், சர்க்கரை, ஆரோக்கியம், ஏலக்காய், குழந்தைகள்

செய்முறை: ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் முந்திரி பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும். ஆற வைத்துப் முந்திரியை மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைக்கவும். சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும். பாகில் அரைத்தப் முந்திரி கலவையைக் கொட்டிக் கிளறவும்.

சிறிது சிறிதாக நெய் சேர்க்கவும். ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தட்டிற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும். சுவையான முந்திரி பர்ஃபி தயார். குழந்தைகளிடம் கொடுத்து பாருங்கள். விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கும் ஆரோக்கியம் நிறைந்தது.

Tags :
|
|
|