Advertisement

காலிஃப்ளவர் புதினா சாதம் செய்து கொடுங்கள்... குடும்பத்தினர் ருசித்து சாப்பிடுவார்கள்!!!

By: Nagaraj Tue, 24 Oct 2023 06:55:51 AM

காலிஃப்ளவர் புதினா சாதம் செய்து கொடுங்கள்... குடும்பத்தினர் ருசித்து சாப்பிடுவார்கள்!!!

சென்னை: காலிஃப்ளவர் புற்றுநோயை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலிஃப்ளவரில் சல்போரபேன் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கிறது. இத்தகைய காலிஃப்ளவரை புதினாவுடன் சேர்த்து வெரைட்டி ரைஸ் செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

தேவையானவை
நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப்சாதம் – ஒரு கப்பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)பச்சை மிளகாய் – தேவையான அளவுஇஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்புதினா – ஒரு கைப்பிடி அளவுஎண்ணெய், நெய் – தலா 2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவு.

cauliflower,mint,cheddar,ginger,garlic paste ,காலிஃப்ளவர், புதினா, சாதம், இஞ்சி, பூண்டு விழுது

செய்முறை: காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும். புதினாவுடன் பச்சை மிளகாய் சேர்த்துத் தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

வாணலியில் எண்ணெய், நெய் ஊற்றி வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் அரைத்த புதினா விழுது, உப்பு சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பிறகு காலிஃப்ளவரைச் சேர்த்து வேகவிட்டு இறக்கவும்.

இதனுடன் சாதம் சேர்த்து நன்கு புரட்டி எடுத்தால், காலிஃப்ளவர் – புதினா வெரைட்டி ரைஸ் ரெடி. சுவையும் அருமையாக இருக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகம் அளிக்கும்.

Tags :
|
|