Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட சீஸ் கார்ன் வெஜ் தோசா செய்து கொடுங்கள்

By: Nagaraj Sat, 25 Mar 2023 7:06:04 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட சீஸ் கார்ன் வெஜ் தோசா செய்து கொடுங்கள்


சென்னை: சீஸி கார்ன் வெஜ் தோசா செய்து பார்ப்போம். குழந்தைகளுக்கு மாலை வேளையில் செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையானவை :
தோசை மாவு - தேவையான அளவுக்ரீம் சீஸ் - 50 கிராம்ஸ்வீட் கார்ன் - 50 கிராம்கேரட், பீன்ஸ், பீட் ரூட், நூல்கோல், முள்ளங்கி,உருளைக் கிழங்கு, காலிஃபிளவர்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்உப்பு & எண்ணெய் - தேவைக்கேற்ப.

dosa flour,cream cheese,sweet corn,carrots,beans,beetroot,spinach,radish ,தோசை மாவு, க்ரீம் சீஸ், ஸ்வீட் கார்ன்,  கேரட், பீன்ஸ், பீட்ரூட், நூல்கோல், முள்ளங்கி

செய்முறை: ஸ்வீட் கார்னை நறுக்கிய காய்கறியுடன் கலந்து, இட்லித் தட்டில் அள்ளி வைத்து பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும். பின் அதனுடன் உப்பு, மிளகுத் தூள், க்ரீம் சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். தோசைக் கல்லில் மாவை மெல்லிய தோசையா வார்த்து, எண்ணெய் தெளித்து வேகவிடவும். மொறுமொறுப்பா வெந்து வரும்போது, தீயை சிறிதாக்கி விடவும்.

கலந்து வைத்துள்ள கலவையை தோசை முழுக்க தேவையானதை பரத்தி, தோசை கரண்டியால் அமுத்தி விடவும். பிறகு, தோசையை சுருட்டி (roll) எடுத்து, தட்டில் வைத்து, சாஸ் தொட்டு சாப்பிடவும். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் சத்தான தோசை ரெடி!

Tags :
|