Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட செய்து தாருங்கள் சிக்கன் கொத்து இடியாப்பம்

By: Nagaraj Sat, 30 July 2022 10:42:02 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட செய்து தாருங்கள் சிக்கன் கொத்து இடியாப்பம்

சென்னை: சிக்கன் கொத்து இடியாப்பம் செய்து கொடுத்து பாருங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள், இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 6முட்டை - 2வெங்காயம் - 2தக்காளி - 2பச்சை மிளகாய் - 3மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டிமிளகாய் தூள் - 1 தேக்கரண்டிமிளகுசிக்கன் துண்டுகள்சிக்கன் கிரேவி - 1/2 கப்கறிவேப்பிலைகொத்துமல்லி தழைகல் உப்புஎண்ணெய்

idiyappam,egg,onion,tomato,green chilli ,இடியாப்பம், முட்டை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய்

செய்முறை: முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிய பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானவுடன் அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இந்த வதக்கிய கலவையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும் இதனுடன் மிளகு தூள்,வேகவைத்த சிக்கன் துண்டுகள், இடியாப்பம், சிக்கன் கிரேவி சேர்த்து நன்கு கிளறவும்.

இறுதியாக கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும். சுவையான மற்றும் எளிமையான சிக்கன் கொத்து இடியாப்பம் தயார்.

Tags :
|
|
|