Advertisement

மொறு மொறுவென்று ஐவ்வரிசி தோசை செய்து பாருங்கள்

By: Nagaraj Sun, 11 Sept 2022 3:26:34 PM

மொறு மொறுவென்று ஐவ்வரிசி தோசை செய்து பாருங்கள்

சென்னை: சூப்பரான மொறு மொறு ஜவ்வரிசி தோசை செய்து பார்த்து இருக்கீங்களா. செய்து பாருங்கள். ருசி பிரமாதமாக இருக்கும். ஜவ்வரியில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் ஜவ்வரிசியில் தோசை செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


தேவையான பொருட்கள் : புழுங்கலரிசி - ஒன்றரை கப், ஜவ்வரிசி (மாவு அரிசி) - 1 கப், சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 4, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

maize dosa,green chillies,cumin,mustard,onions ,ஜவ்வரிசி தோசை, பச்சை மிளகாய், சீரகம், கடுகு, சின்ன வெங்காயம்

செய்முறை: ஜவ்வரிசியைக் கழுவி, 4 மணி நேரம் தயிரில் ஊறவைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். முதலில் அரிசியை ஆட்டவும். பின் ஜவ்வரிசியையும் ஆட்டி எடுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சூடு வந்ததும் கடுகு தாளித்து பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதோடு உப்பு சேர்த்து மாவில் சேர்த்து கலந்து கொள்ளவும்.

தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும். இப்போது சூப்பரான ஜவ்வரிசி தோசை ரெடி.

Tags :
|