Advertisement

குடும்பத்தினர் ஆரோக்கியத்தை உயர்த்த மூலிகை ரசம் செய்து கொடுங்கள்

By: Nagaraj Fri, 17 June 2022 3:52:57 PM

குடும்பத்தினர் ஆரோக்கியத்தை உயர்த்த மூலிகை ரசம் செய்து கொடுங்கள்

சென்னை: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மூலிகை ரசத்தை உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுங்கள்.
தேவையான பொருள்கள்:
புளி - ஒரு நெல்லிக்காய் அளவுதுளசி இலை - 10கற்பூரவல்லி இலை - 3வெற்றிலை - 2நார்த்த இலை - 3கறிவேப்பில்லை - தேவையான அளவுகொத்தமல்லி இலை,புதினா - தலா 1 கைப்பிடிமஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்ரசப் பொடி (கடைகளில் கிடைக்கும்) - ஒன்றரை ஸ்பூன்உப்பு - தேவையான அளவுஎண்ணெய் - 2 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் - 5கடுகு - தாளிக்கவெந்தயம் - தாளிக்கபெருங்காயம் - கால் ஸ்பூன்

herbal broth,basil,camphor leaf,betel leaf,norther leaf ,மூலிகை ரசம், துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை

செய்முறை:முதலில் புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து மண் இல்லாத படி நன்கு வடிகட்டிக் கொள்ளவும். துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினாவை நன்றாக கழுவி கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சிலைகளை (துளசி, கற்பூரவல்லி இலை, வெற்றிலை, நார்த்த இலை. கொத்தமல்லி, புதினா) கழுவி இரண்டு நிமிடம் வதக்கி அது ஆறியதும் அரைத்து கொள்ளவும்.

அரைத்த பச்சிலை கலவையை புளித் தண்ணீருடன் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த புளித்தண்ணீருடன் மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, ரசப் பொடி ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்கு கலக்கவும். மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், பெருங்காயம் போட்டு தாளித்து அதில் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி சூடாகப் பரிமாறவும். இதோ இப்போது சுவையான மூலிகை ரசம் தயார்.

Tags :
|