Advertisement

பலாப்பழ பாயசம் செய்து அசத்துங்கள்!!!

By: Nagaraj Wed, 19 Oct 2022 11:31:03 PM

பலாப்பழ பாயசம் செய்து அசத்துங்கள்!!!

சென்னை: பலாப்பழ பாயசம் மிகவும் பிரசத்தி பெற்றது. அங்கு இந்த பாயசத்தை சக்க பாயசம் என்று அழைக்கின்றனர். சரி வாருங்கள் புதுவிதமாக பலாப்பழத்தை வைத்து பாயசம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.


தேவையான பொருள்கள்:

பலாப்பழம்- அரை கிலோ
சவ்வரிசி- அரை கப்
வெல்லம்- கால் கிலோ
தேங்காய்ப்பால்- இரண்டு கப்
நெய், முந்திரி, திராட்சை, தண்ணீர்- தேவையான அளவு

coconut milk,cashews,jackfruit,grapes,tamarind ,
தேங்காய்பால், முந்திரி, பலாப்பழம், திராட்சை, சவ்வரிசி

செய்முறை: ஒரு பாத்திரத்தில், 10 நிமிடம் ஊற வைத்த சவ்வரிசியை சேர்த்து, இரண்டு முதல் மூன்று கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து 5 முதல் பத்து நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும்.


பின்பு அதில், சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிய பலாப்பழத்தை சேர்க்க வேண்டும். இதை 5 நிமிடங்கள் அந்த சவ்வரிசியுடன் சேர்த்து வேக வைக்க வேண்டும்.


ஒரு கடாயில் வெல்லம் மற்றும் அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து வெல்லத்தை கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில், எந்த பதமும் தேவையில்லை. வடிகட்டிய வெல்ல நீரை சவ்வரிசி மற்றும் பலாப்பழத்துடன் சேர்த்து நன்றாக கலக்கிவிட வேண்டும். இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வரை அதை அப்படியே மூடி வைக்க வேண்டும்.


பின்பு அதில், தேங்காய்ப்பால் இரண்டு கப் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கலக்கி விட வேண்டும். நெய்யில் தேவையான அளவு முந்திரி மற்றும் திராட்சையை பொறித்து பாயசத்தில் சேர்க்க வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் தேங்காய் சீவல்களையும் நெய்யில் பொறித்து சேர்த்துக் கொள்ளலாம்.

உங்களுக்கு தேவையான அளவு நெய்யைப் பாயசத்திலும் முந்திரி மற்றும் உலர்ந்த திராட்சைகளைப் பொரிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பலாப்பழங்களை அரைத்தும் பயன்படுத்தலாம்.

Tags :
|