Advertisement

முட்டையில் லாலிபாப் செய்து கொடங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்

By: Nagaraj Mon, 20 Nov 2023 09:41:20 AM

முட்டையில் லாலிபாப் செய்து கொடங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்

சென்னை: முட்டையில் செய்யப்படும் எந்த ரெசிபியும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளால் விரும்பப்படுகிறது. முட்டையில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் ருசியான முட்டை லாலிபாப் செய்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இதில் ஒமேகா – 3, அமினோ ஆசிட்கள் போன்றவை உள்ளது. மேலும் இது புரதச்சத்துக்கள் அதிகம் கொண்டிருப்பதால் எலும்புகளுக்கு நல்லது.

தேவையான பொருட்கள்
முட்டை- 4 (அவித்தது)வெங்காயம்- 1 (நறுக்கியது)பச்சைமிளகாய்- 1 (நறுக்கியது)மிளகாய் தூள்தனியா தூள்கரம் மசாலா தூள்சீரகத்தூள்மிளகு தூள்பிரெட் தூள்கொத்தமல்லி தழை- ஒரு கைப்பிடி

egg,lollipop,evening meal,chili powder,taniya powder ,முட்டை, லாலிபாப், மாலை நேரம், மிளகாய் தூள், தனியா தூள்

செய்முறை: ஒரு கிண்ணத்தில் 4 அவித்த முட்டைகளையும் துருவிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு ஒரு பாதித்திரத்தில் துருவிய முட்டைகளை போட்டு அதில் பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி, மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், உப்பு மற்றும் பிரெட் தூள் போட்டு லேசாக தண்ணீர் தெளித்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, ஒரு ஸ்பூன் மிளகு தூள்சேர்த்து நன்றாக அடித்து கலக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து முட்டை கலவையில் தேய்த்து பின்னர் பிரெட் தூளில் பிரட்டி எடுத்து ஒரு பிளேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டைகளாக போட்டு நன்றாக பொன்னிறமாக வரும் வரை பொரித்து எடுக்க வேண்டும். பொறித்த உருண்டைகளில் டூத் ஸ்டிக்கை சொருகி வைத்தால் சுவையான, சூடான, ருசியான முட்டை லாலிபாப் தயார். இதை வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டார்கள். மழைக்காலங்களில் மாலைநேர ஸ்டாக்சாக பரிமாற வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Tags :
|