Advertisement

தினை பருத்தி பால் தயாரித்து அருந்துங்கள்... ஆரோக்கியத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்...!

By: Nagaraj Sat, 20 May 2023 11:05:59 PM

தினை பருத்தி பால் தயாரித்து அருந்துங்கள்... ஆரோக்கியத்தை உயர்த்திக் கொள்ளுங்கள்...!

சென்னை: தினையில் உள்ள மாவுச்சத்து, குழந்தைகள் மற்றும் அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு தேவையான ஆற்றலை அளிக்கிறது. தினையில் புரதச்சத்து அதிகம் உள்ளதால், உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஏற்ற உணவு. உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஊட்டம்தரும் தினை பருத்தி பால் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:
தினை அரிசி மாவு – 50 கிராம்பருத்தி விதை – 200 கிராம்கருப்பட்டி – 150 கிராம்உப்பு – 1 சிட்டிகைஏலக்காய்தூள் – சிறிதுசுக்குத் தூள் சிறிது

cotton,fatigue,millet milk,nutrition,relieves,vitality, ,ஊட்டச்சத்து, சுறுசுறுப்பு, சோர்வு, தினைப்பால், நீங்கும், பருத்தி

செய்முறை: சுத்தமான பருத்தி விதையை 10 – 12 மணி நேரம் ஊற வைத்து நன்றாக அலசவும். பிறகு அதனைப் பால் பிழிந்து கொள்ளவும் இரண்டு, மூன்று முறை பால் எடுக்கவும்.

கருப்பட்டியை நீரில் கரைத்து வடிக்கட்டி கொதிக்க விடவும் இதனுடன் பருத்திப் பாலை சேர்க்கவும். கொதித்து வந்ததும், தினை அரிசிமாவை கரைத்து அதில் ஊற்றவும். நிதானமாக சூட்டில் கைவிடாமல் 3 நிமிடம் கிளறவும். தூள் வகைகளைத் தூவி இறக்கவும்.

காலையில், மாலையில் உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணிநேரம் முன்பாக இந்த திணை பருத்திப்பாலை அருந்திவர ஊட்டச்சத்து உடலில் சேரும். சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

Tags :
|