Advertisement

எளிமையான முறையில் மட்டன் குழம்பு செய்து அசத்துங்கள்

By: Nagaraj Mon, 27 June 2022 5:51:32 PM

எளிமையான முறையில் மட்டன் குழம்பு செய்து அசத்துங்கள்

சென்னை: ஈசியான முறையில் மட்டன் குழம்பு செய்யலாம் வாங்க. இதை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள் -
மட்டன் - 300 கிராம்
உப்பு - தேவையான அளவு
மல்லித் தழை - சிறிது
அரைக்க -

மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
மல்லித் தூள் - 2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
சோம்புத் தூள் - 1/2 தேக்கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
பட்டை - 1 இன்ச்
கிராம்பு - 1
ஏலக்காய் - 1
தேங்காய் துருவல் - 6 மேஜைக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
மல்லித்தழை - சிறிது

தாளிக்க -

நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 1/4
கறிவேப்பிலை - சிறிது

mutton,hazelnut oil,onion,mustard,chilli powder,coriander powder ,மட்டன், நல்லெண்ணெய், வெங்காயம், கடுகு, மிளகாய் தூள், மல்லித்தூள்

செய்முறை: முதலில் மட்டனை நன்றாக கழுவி நீரை வடித்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் மட்டனை சேர்த்து 5 நிமிடம் கிளறவும். பிறகு அரைத்த கலவையுடன் 300 மில்லி தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி கொதிக்க வைக்கவும். கொதித்ததும் குக்கரை மூடி விடவும். நீராவி வந்ததும் வெயிட் போடவும். முதல் விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

25 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைக்கவும். நீராவி அடங்கியதும் மல்லித் தழை தூவி இறக்கவும். சுவையான மட்டன் குழம்பு ரெடி.

Tags :
|
|