Advertisement

கிராமத்து சுவை மாறாமல் வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்கள்

By: Nagaraj Sun, 30 Aug 2020 08:57:43 AM

கிராமத்து சுவை மாறாமல் வெங்காய காரக்குழம்பு செய்து அசத்துங்கள்

வெங்காய காரக்குழம்பு என்றால் பலருக்கும் மிகுந்த விருப்பம். அதிலும் கிராமத்து ஸ்டைலில் வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

சின்ன வெங்காயம் - 10,
காய்ந்த மிளகாய் - 1,
சாம்பார் பொடி - 4 டீஸ்பூன்,
புளி - எலுமிச்சம் பழ அளவு,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெந்தயம்- 1 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - 100 மில்லி,
உப்பு - தேவையான அளவு.
கறிவேப்பிலை - சிறிதளவு.

fermentation solution,curry leaves,onion,curry powder,chilli ,புளிக்கரைசல், கறிவேப்பிலை, வெங்காயம், காரக்குழம்பு, மிளகாய்

செய்முறை: சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். புளியை ஊற வைக்கவும். மேலும் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும்.

அடுத்து இதில் சாம்பார் பொடி சேர்த்து வேக விடவும். புளிக் கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு கறிவேப்பிலை சேர்க்கவும்.
சுவையான வெங்காய காரக்குழம்பு ரெடி.

Tags :
|