Advertisement

காலை வேளையில் ஆரோக்கியத்தை உயர்த்த தினை மாவில் பூரி செய்து அசத்துங்கள்

By: Nagaraj Mon, 16 Oct 2023 1:57:52 PM

காலை வேளையில் ஆரோக்கியத்தை உயர்த்த தினை மாவில் பூரி செய்து அசத்துங்கள்

சென்னை: சத்துமிகுந்த மற்றும் கலோரி குறைந்த உணவான தினை மாவில் பூரி செய்து கொடுத்து உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை உயர்த்துங்கள்.

தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு – 1தினை மாவு – 1 கப்கொத்தமல்லி இலைகள்- நறுக்கியது (1 கைப்பிடியளவு)இஞ்சி பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்நெய் – 2 டேபிள் ஸ்பூன்எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவுஉப்பு – 1 டேபிள் ஸ்பூன்

potato,millet flour,coriander,ginger paste ,உருளைக்கிழங்கு, தினை மாவு, கொத்தமல்லி, இஞ்சி பேஸ்ட்

செய்முறை: முதலாவது உருளைக்கிழங்கை வேக வைத்து அதன் தோலை உரித்து கொள்ளவும். அதன்பிறகு இதனை நன்றாக பிசைந்து அதனுடன் இஞ்சி பேஸ்ட், பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி இலைகள், உப்பு, நெய் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

இவற்றை எல்லாம் கலந்த பிறகு அதனுடன் தினை மாவையும் சேர்த்து பூரி பதத்திற்கு பிசைந்து பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து சிறு உருண்டைகளாக மாவை உருட்டி கொள்ளுங்கள்.

அதன்பின்னர் பூரி செய்ய பயன்படுத்தும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு கொதித்ததும் ஒவ்வொரு உருண்டையையும் பூரி மாதிரி உருட்டி ஒவ்வொன்றாக பொரித்து எடுக்கவும். அதன்பிறகு பிடித்தமான சைடிஸ் உடன் வைத்து சாப்பிடுங்கள்.

Tags :
|