Advertisement

விறால் மீன் மாங்காய் குழம்பு செய்து அசத்துங்கள்...!

By: Nagaraj Sun, 19 June 2022 11:57:01 AM

விறால் மீன் மாங்காய் குழம்பு செய்து அசத்துங்கள்...!

சென்னை: அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தது மீன் வகைகள். அதிலும் விறால் மீன் என்றால் மிகவும் விருப்பம்தான். விறால் மீன் மாங்காய் குழம்பு செய்து பாருங்கள்.


தேவையான பொருட்கள்:


விறால் மீன் துண்டுகள் - 6
எண்ணெய்-தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம்-20
பூண்டு-20
வெந்தையம்-1/2 tsp
கறிவேப்பிலை-சிறிதளவு
தக்காளி-2
மாங்காய்-2
புளி-1 டீஸ்பூன்
மிளகாய் பொடி-1 டீஸ்பூன்
கொத்தமல்லி பொடி-2 டீஸ்பூன்
மஞ்சள்-1 டீஸ்பூன்

shrimp,coconut,onion,tomato,garlic,curry leaves ,விறால் மீன், தேங்காய், வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை

செய்முறை: விறால் மீனை நன்றாக கழுவி அதில் சிறிதளவு உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம்,பூண்டு மற்றும் தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.

மாங்காவை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதில் வெந்தையத்தையும்,கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். அதில் வெங்காயம், பூண்டு மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பிறகு புளியை கரைத்து அதில் மிளகாய் பொடி, கொத்தமல்லி மற்றும் மஞ்சள்பொடி சேர்த்து அதனுடன் மாங்காயையும் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு மீனை சேர்த்து கொதிக்க விடவும். இப்போது விறால் மீன் குழம்பு தயார். கடைசியில் தேங்காய் எண்ணெய் சேர்த்தால் கூடுதல் மனம் கிடைக்கும்.

Tags :
|
|
|
|