Advertisement

உங்கள் குடும்பத்தினருக்கு சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்து கொடுங்கள்

By: Nagaraj Sat, 03 Sept 2022 10:12:12 PM

உங்கள் குடும்பத்தினருக்கு சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்து கொடுங்கள்

சென்னை: சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். அவர்களும் ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையானவை

சிக்கன் – 500 கிராம்
கருப்பு ஏலக்காய் – 1
பிரியாணி இலை – 1
பட்டை – 1 இன்ச்
ஏலக்காய் – 3
கிராம்பு – 2
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
தயிர் – 1/2 கப்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

cardamom,cloves,biryani leaves,chicken gravy,coriander ,ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, சிக்கன் கிரேவி, கொத்தமல்லி

செய்முறை: முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வதக்க வேண்டும். தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் தயிர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீர் ஊற்றி நன்கு கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால் சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.

Tags :
|