Advertisement

சுண்டல் கபாப் செய்து கொடுங்கள்... குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்

By: Nagaraj Mon, 20 Nov 2023 09:45:51 AM

சுண்டல் கபாப் செய்து கொடுங்கள்... குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்

சுண்டல் கபாப் சாப்பிடுங்கள்: அதன் செய்முறை உங்களுக்காக!!!
சென்னை: மாலை நேரத்தில் சூடான காபியுடன் காரசாரமான ஸ்நாக்ஸ் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும். அந்த வகையில் சுண்டல் கபாப் பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அடுத்தமுறையும் இது போல் செய்ய சொல்லி கேட்பார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். வாங்க சுண்டல் கபாப் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கருப்பு கொண்டை கடலை – 1 கப்,பொட்டுக்கடலை – 1/4 கப்,சோம்பு – 1/4 ஸ்பூன்,இஞ்சி – சிறிய துண்டு,பூண்டு – 2 பல்,பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,கரம் மசாலா – 1/2 ஸ்பூன்,தனியா தூள்- ஒரு ஸ்பூன்மிளகாய்தூள்- ஒரு ஸ்பூன்உப்பு தேவையான அளவு,கறிவேப்பிலைகொத்தமல்லித் தழை- தேவையான அளவு

anise,sundal kebab,chopped onion,garam masala powder,chilli powder ,சோம்பு, சுண்டல் கபாப், நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாதூள், மிளகாய்தூள்

செய்முறை: கருப்பு கொண்டை கடலையை முந்தின நாள் இரவே ஊறவைத்துக்கொள்ள வேண்டும். மறுநாள் ஊறவைத்த கொண்டை கடலையை எடுத்து அதனை குக்கரில் போட்டு வேகவைத்து எடுக்க வேண்டும். வேக வைத்த கொண்டைக் கடலையை மிக்சி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோன்று பொட்டுக்கடலையையும் மிக்சி ஜாரில் போட்டு நைசாக பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கொண்டைகடலை மாவு அதனுடன் பொட்டுக்கடலை மாவு சேர்க்க வேண்டும். அதன்பிறகு சோம்பு, இஞ்சி, பூண்டு, நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாதூள், மிளகாய்தூள், தனியாதூள், மிளகாய் தூள், உப்பு, கறிவேப்பிலை, மல்லி தழை சேர்த்து கிளர வேண்டும்.

அதனுடன் தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை ஹார்லிக்ஸ் அல்லது பூஸ்ட் பாட்டிலின் மூடிகளில் நிரப்பி வட்ட வடிவில் தட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு இந்த கபாப்களை தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது முன்னும் பின்னுமாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான சுண்டல் கபாப் தயார். சூடான சுண்டல் கபாப் புதினா சட்னியுடன் சாப்பிட மிகவும் ஏற்றது.

Tags :
|