Advertisement

குழந்தைகளுக்கு சூப்பர் சுவையில் சொஜ்ஜி அப்பம் செய்து தாருங்கள்

By: Nagaraj Mon, 19 June 2023 7:28:17 PM

குழந்தைகளுக்கு சூப்பர் சுவையில் சொஜ்ஜி அப்பம் செய்து தாருங்கள்

சென்னை: குழந்தைகளுக்கு சூப்பர் சுவையில் ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் விரும்பி இந்த ஸ்நாக்ஸ்சை சாப்பிடுவார்கள். சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.

தேவையான பொருட்கள் ரவை - 1 கப் மைதா - 1 கப் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - ஒன்றரை கப் எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு உப்பு - சிட்டிகை நெய் - 1 டீஸ்பூன்

sojji,appam,semolina,coconut,sugar,maida flour ,சொஜ்ஜி, அப்பம், ரவை, தேங்காய், சர்க்கரை, மைதா மாவு

செய்முறை: வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக் கொள்ளுங்கள். மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.

இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள். ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.

இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள். வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள். இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.

Tags :
|
|
|