Advertisement

இரவு நேரத்தில் அருமையான உணவு புல்கா... சைட் டிஷ் காய்கறி சப்ஜி

By: Nagaraj Fri, 08 May 2020 10:44:22 AM

இரவு நேரத்தில் அருமையான உணவு புல்கா... சைட் டிஷ் காய்கறி சப்ஜி

இரவு நேரத்தில் டிபன் சாப்பிடுவது வழக்கமான ஒன்று. இதில் ஆரோக்கியமும் சுவையும் நிறைந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அந்த வகையில் புல்கா சப்பாத்தி பெஸ்ட் சாய்ஸ்.

புல்கா சப்பாத்தி செய்ய தேவையானவை: கோதுமை மாவு - 2 டம்ளர், தண்ணீர் - 1 டம்ளர், உப்பு - அரை டீஸ்பூன்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, தண்ணீர், உப்பு போட்டு நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வையுங்கள். இனி, சப்பாத்தி தயாரித்து, தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்து, எண்ணெய் ஊற்றாமல் இரண்டு பக்கமும் சப்பாத்தியை நன்கு வேக வைத்து எடுக்க வேண்டும்.
அதே சூட்டோடு சப்பாத்தியை கேஸ் அடுப்பு நெருப்பில் இரண்டு பக்கமும் காட்டி எடுத்துவிட்டால் புல்கா சப்பாத்தி ரெடி.
தீயில் அதிக நேரம் வைத்தால், சப்பாத்தி கருகிவிடும். இந்த புல்கா சப்பாத்தியை எண்ணெய் தடவாமல் அப்படியே மடித்து வைத்தால் மறுநாள் வரைகூட சாஃப்ட்டாக இருக்கும்.


pulka,subji,vegetables,health,night tipan,onion. ,புல்கா, சப்ஜி, காய்கறிகள், உடல் ஆரோக்கியம், இரவு டிபன், வெங்காயம்.

புல்காவுக்கு சைட் டிஷ் சப்ஜி

செய்ய தேவையானவை: உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட காய்கறிகள் - கால் கிலோ. பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, பச்சை மிளகாய் - 2, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் - 2 டம்ளர், உப்பு - தேவையான அளவு, எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு.

pulka,subji,vegetables,health,night tipan,onion. ,புல்கா, சப்ஜி, காய்கறிகள், உடல் ஆரோக்கியம், இரவு டிபன், வெங்காயம்.

செய்முறை

காய்கறிகள் எல்லாவற்றையும் கழுவி, நறுக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும், காய்கறிகளைப் போட்டு, அதனுடன் மிளகாய்ப்பொடி, தேவையான உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து, தண்ணீர் விட்டு, குக்கரை மூடி 'சிம்’மில் வேக வைக்க வேண்டும்.

இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெந்த காய்கறியில் இதைச் சேர்த்து கிளறி இறக்குங்கள். ஆரோக்கியம் நிறைந்த புல்கா சப்பாத்தியும் ரெடி, அதற்கு அருமையான சுவையில் சைட் டிஷ் சப்ஜியும் ரெடி. இந்த சப்ஜியில் அதிகளவு காய்கறிகள் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

Tags :
|
|
|