Advertisement

குழந்தைகள் ருசித்து சாப்பிட இனிப்பு அவல் புட்டு செய்து கொடுங்கள்

By: Nagaraj Sun, 18 Dec 2022 11:09:23 PM

குழந்தைகள் ருசித்து சாப்பிட இனிப்பு அவல் புட்டு செய்து கொடுங்கள்

சென்னை: இனிப்பு அவல் புட்டு செய்து கொடுங்கள். உங்கள் குழந்தைகள் ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையான பொருள்கள் -அவல் - 1 கப்சீனி - 10 மேஜைக்கரண்டிதண்ணீர் -1 1/2 கப்தேங்காய் துருவல் - 3/4 கப் (75 கிராம் )உப்பு - 1/4 தேக்கரண்டி

she is pudding,salt,sugar,pan,children ,அவல் புட்டு, உப்பு, சீனி, பாத்திரம், குழந்தைகள்

செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து அவலை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். சிம்மில் வைத்து வறுக்கவும். ஆறிய பின் மிக்ஸ்சியில் பொடித்துக் கொள்ள வேண்டும்.
தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சுட வைக்கவும். பின் அடுப்பை அணைத்து விட்டு சுடு தண்ணீரை அவலோடு சேர்த்து நன்கு கிளற வேண்டும். அதனோடு தேங்காய் துருவலையும் போட்டு கிளறவும்.

அதன் பிறகு இந்த கலவையை இட்லி தட்டில் அல்லது புட்டு குழலில் வைத்து 10 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். வெந்ததும் ஒரு பாத்திரத்தில் அவல் புட்டு மற்றும் சீனியைப் போட்டு கிளறவும். சுவையான அவல் புட்டு ரெடி.

Tags :
|
|
|