Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிட செய்து கொடுங்கள் கேரட் அல்வா

By: Nagaraj Wed, 13 July 2022 4:10:41 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிட செய்து கொடுங்கள் கேரட் அல்வா

சென்னை: கேசரி செய்வது எவ்வளவு சுலபமோ! அதை விட சுலபமாக செய்யலாம் காரட் அல்வாவை. துருவிய காரட் என்பதால், கட்டிகள் உருவாக வாய்ப்பில்லை. இனிப்புத்தன்மை மற்றும் நெய், குறைவாக சேர்ப்பதால் உடல் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம்.

இயற்கையிலேயே நிறம் அதிகமாக காரட்டில் இருப்பதால் செயற்கை வண்ணம் சேர்க்கத்தேவையில்லை. பால், பாதாம், சர்க்கரை துருவிய காரட், சுவை சேர்க்க சிறிது நெய் போன்ற சத்து நிறைந்த பொருட்களின் கலவை இந்த காரட் அல்வா. குழந்தைகள் மிகவும் விரும்பும் ஒரு அற்புதமான இனிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேவையான பொருட்கள்:
காரட் – 1/2 கிலோசர்க்கரை -1/4 கிலோநெய்-2 மேஜைக்கரண்டிபச்சை கற்பூரம் 1 சிட்டிகைபாதாம் பருப்பு- 10 லிருந்து 15பால்-1 கோப்பை

carrot,sugar,alva,health,milk,almonds ,காரட், சர்க்கரை, அல்வா, ஆரோக்கியம், பால், பாதாம்

செய்முறை:பாதாமை ஊறவைத்து பால் விட்டு அரைத்துக்கொள்ளவும். அல்லது தூளாகவும் அரைத்து வைத்துக்கொள்ளலாம். காரட்டை துருவி, அரைத்த பாதாம் மற்றும் பால் சேர்த்து குக்கரில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் போட்டு நன்கு வேகவைக்கவும்.

பிறகு சர்க்கரை சேர்த்து கிளறவும், இடையே சிறிது நெய் சேர்க்கவும், நன்கு கெட்டியாக பாத்திரத்தில் ஒட்டாமல், சுருண்டு வரும்போது மீதமுள்ள நெய் சேர்த்து, பச்சை கற்பூரம் சேர்த்து, கிண்டி அடுப்பிலிருந்து இறக்கவும். சுவையான காரட் அல்வா எளிதில் தயார். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான ஒன்றும் கூட. விரும்பியும் சாப்பிடுவார்கள்.

Tags :
|
|
|
|
|