Advertisement

குடும்பத்தினரை அசத்த ஆப்பிள் அல்வா செய்து தாருங்கள்

By: Nagaraj Sat, 25 June 2022 10:32:50 AM

குடும்பத்தினரை அசத்த ஆப்பிள் அல்வா செய்து தாருங்கள்

சென்னை: குடும்பத்தினரை அசத்த வேண்டுமா. அப்போ ஆப்பிள் அல்வா செய்து தாருங்கள்.


தேவையான பொருள்கள்:
ஆப்பிள் - 2
சீனி - 4 மேஜைக்கரண்டி
நெய் - 5 மேஜைக்கரண்டி
முந்திரிப் பருப்பு - 10

apples,alva,cashews,ghee,milled ,ஆப்பிள், அல்வா, முந்திரிப்பருப்பு, நெய், துருவல்

செய்முறை: ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.

அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் ஆப்பிள் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும்.

நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், சீனி, இரண்டையும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும். அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.

Tags :
|
|
|