Advertisement

மணக்க மணக்க அப்பளம் வத்தக்குழம்பு செய்முறை

By: Nagaraj Wed, 06 July 2022 3:26:53 PM

மணக்க மணக்க அப்பளம் வத்தக்குழம்பு செய்முறை

சென்னை: பாட்டிக்காலத்தில் அப்பளம் வத்தக்குழம்பு மணக்க மணக்க வைப்பார்கள். சுட, சுட சாப்பாடு போட்டு அதில் கொஞ்சம் நல்லெண்ணையை ஊற்றி அப்பளம் போட்ட வத்தக்குழம்பை ஊற்றி சாப்பிட்டால் ஆஹா... என்ன ருசி என்று பாராட்டத் தோன்றும். அதே ருசியை நீங்களும் வீட்டில் செய்து பாருங்கள்.

தேவையானவை: புளி - எலுமிச்சை அளவு, மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், பெருங்காயம் - அரைடீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு,நல்லெண்ணெய் - கால் கப், அப்பளம் - 3. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - அரைடீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் -4, எண்ணெய் - கால் கப்.

waffles,tamarind,chili powder,turmeric powder. aloe vera,salt ,அப்பளம், புளி, மிளகாய்தூள், மஞ்சள்தூள். பெருங்காயம், உப்பு

செய்முறை:புளியை 2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். அப்பளத்தை ஒன்றிரண்டாக ஒடித்துவைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேருங்கள்.

இது இளம் பொன்னிறமானதும், அப்பளத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து, புளித்தண்ணீரைச்சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள் தூள், பெருங்காயம், உப்பு சேர்த்து பச்சை வாசனைபோகக் கொதிக்க விட்டு இறக்குங்கள். வாசனை ஆளைத்தூக்கும் அட்டகாசமான குழம்பு இது. சாப்பிட்டு பாருங்கள் அசந்து போய்விடுவீர்கள்.

Tags :