Advertisement

வித்தியாசமாக ஆந்திர ஸ்டைலில் மாங்காய் சட்னி செய்முறை

By: Nagaraj Sat, 12 Nov 2022 11:02:50 PM

வித்தியாசமாக ஆந்திர ஸ்டைலில் மாங்காய் சட்னி செய்முறை

சென்னை: ஆந்திரா ஸ்டைலில் மாங்காய் சட்னி செய்வோமா.
இதனை உங்கள் குடும்பத்தினருக்கு செய்து கொடுத்துப் பாருங்கள். அனைவருக்கும் பிடிக்கும்.


தேவையானப் பொருட்கள்

மாங்காய் - 1/2 (நறுக்கியது)
பாசி பருப்பு - ¼ கப்
வரமிளகாய் - 4
சீரகம் - 1டீஸ்பூன்
வெல்லம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ½ டீஸ்பூன் மிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது

mango,cumin,cumin,salt,jaggery,chutney ,மாங்காய், சீரகம், வரமிளகாய், உப்பு, வெல்லம், சட்னி

செய்முறை: முதலில் மாங்காயின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்கவும்.

பின்பு அதே வாணலியில் சீரகம் மற்றும் வரமிளகாய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அடுத்து மிக்ஸியில் வறுத்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் மாங்காய் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.


இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறினால் ஆந்திரா ஸ்டைல் மாங்காய் சட்னி ரெடி.

Tags :
|
|
|
|