Advertisement

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மாவத்தல் குழம்பு

By: Nagaraj Sun, 18 Dec 2022 10:53:06 PM

உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மாவத்தல் குழம்பு

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் மாவத்தல் குழம்பு செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருள்கள்:

மாவத்தல் அல்லது மாந்தொலி - 1சாம்பார் பொடி -1 1/2 மேஜைக்கரண்டிமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டிபுளி - சிறு கோலி அளவுஉப்பு - தேவையான அளவு
அரைக்க -
தேங்காய்த் துருவல் - 4 மேஜைக்கரண்டிசின்ன வெங்காயம் - 5
தாளிக்க -
நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டிகடுகு - 1/2 தேக்கரண்டிசின்ன வெங்காயம் - 4கறிவேப்பிலை - சிறிது

mavattal gravy,spring onion,curry leaves,mustard,tamarind ,மாவத்தல் குழம்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு, புளி

செய்முறை:அரைக்க கொடுத்தவற்றை அரைத்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை சிறிதாக நறுக்கி கொள்ளவும். புளியை 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டுத் தாளிக்கவும்.

தாளித்ததும் புளியைக் கரைத்து கடாயில் ஊற்றவும்.கொதித்தவுடன் சாம்பார் பொடி, மாவத்தல், மஞ்சள்தூள், உப்பு போட்டு 10 நிமிடங்கள் அல்லது மசாலா வாசனை போகும் வரை கொதிக்க விட வேண்டும். பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும். மாவத்தல் குழம்பு ரெடி.

Tags :