Advertisement

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மீல்மேக்கர் குழம்பு செய்முறை

By: Nagaraj Wed, 21 June 2023 8:50:45 PM

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மீல்மேக்கர் குழம்பு செய்முறை

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான மீல்மேக்கர் குழம்பு செய்வது எப்படி என்று தெரியுங்களா.

தேவையான பொருட்கள்;
மீல்மேக்கர் -1 கப்வெங்காயம் -1தக்காளி -3இஞ்சி -சிறிதளவுபூண்டு -10 பல்சீரகம் -2ஸ்பூன்மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்மிளகாய் தூள் -1/2ஸ்பூன்கடுகு -1/2 ஸ்பூன்உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்பெருஞ்சீரகம் -1/2 ஸ்பூன்தேங்காய் பால் -1/2 கப்வேக வைத்த பச்சை பட்டாணி-1/2 கப்கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு -தேவையான அளவுஎண்ணெய் – தேவையான அளவு

green peas,turmeric powder,chilli powder,salt,cumin meal maker ,பச்சைப்பட்டாணி, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு, சீரகம் மீல்மேக்கர்

செய்முறை: மீல்மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டினை அரைத்து பேஸ்டாக வைத்துகொள்ள வேண்டும். சீரகத்தை லேசாக வறுத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு,உளுத்தம் பருப்பு,பெருஞ்சீரகம் போட்டு தாளித்த பிறகு வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்டைப் போட்டு நன்றாக வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து வதக்கி எண்ணெய் பிரிந்து வரும் போது மீல்மேக்கரைப் போட்டு வதக்கவும். பின்னர் வேகவைத்த பச்சை பட்டாணியை போட்டு நன்றாக கிளறி விடவும்.

தேங்காய் பால் ஊற்றி வறுத்து வைத்த சீரகத்தை சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கொத்தமல்லி தூவி இறக்கவும். இப்போது சுவையான மீல்மேக்கர் குழம்பு தயார். சூடான சாதத்தில் போட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும். மேலும் சப்பாத்தி,தோசைக்கும் ஏற்றது. குழந்தைகள் அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

Tags :
|