Advertisement

சப்புக் கொட்டி ருசித்து சாப்பிட மீல்மேக்கர் மஞ்சூரியன் செய்முறை

By: Nagaraj Wed, 16 Sept 2020 12:19:01 PM

சப்புக் கொட்டி ருசித்து சாப்பிட மீல்மேக்கர் மஞ்சூரியன் செய்முறை

சூப்பராக வீட்டில் உள்ளவர் சப்புக் கொட்டி சாப்பிடும் வகையில் மீல்மேக்கர் மஞ்சூரியன் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

மீல் மேக்கர் - 1 கப்
கார்ன் மாவு - 3 ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தயிர் - 2 ஸ்பூன்
நறுக்கிய குடை மிளகாய் - அரை
நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய இஞ்சி 1 ஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு 1 ஸ்பூன்
சோயா சாஸ்-1 ஸ்பூன்
சில்லி சாஸ்-1 ஸ்பூன்
மிளகுத் தூள்- 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

mealmaker,manchurian,lemon juice,onion leaf ,மீல்மேக்கர், மஞ்சூரியன், எலுமிச்சைச்சாறு, வெங்காயத்தாள்

செய்முறை: முதலில் வெந்நீரில் மீல் மேக்கரை போட்டு உப்புச் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின் சாதாரண தண்ணீரில் நன்கு அலசி, பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின் ஒரு பாத்திரத்தில் பிழிந்த மீல் மேக்கர் இதனுடன் 2 ஸ்பூன் சோள மாவு அரிசி மாவு சிறிது உப்பு மற்றும் அரை ஸ்பூன் மிளகுத் தூள் 1 ஸ்பூன், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் தயிர் சேர்த்து நன்கு மிக்ஸ் பண்ணி 15 நிமிடம் கழித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பின் 1 டம்ளர் தண்ணீரில் 1 ஸ்பூன் சோளமாவு கலந்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும்.

பின் கடாயில் 2 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, முதலில் இஞ்சி, பூண்டு சேர்த்து, வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் குடை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி
அதில் சில்லி, சோயா சாஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அதில் பொரித்த மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்கி பொரித்த மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அதனுடன் தண்ணீரில் கரைத்த சோள மாவைக் ஊற்றி கலந்து விடவும்.

ஊற்றிய தண்ணீர் கெட்டியாக மாறி, பளபளப்பாக மாறும். அப்பொழுது எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலக்கவும். கடைசியாக வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கவும். சூடாகப் பரிமாறவும். சுவையான மீல்மேக்கர் மஞ்சூரியன் ரெடி.

Tags :