Advertisement

மருத்துவக்குணங்கள் நிறைந்த சீதாப்பழத்தில் மில்க் ஷேக் செய்முறை

By: Nagaraj Mon, 07 Nov 2022 11:02:51 PM

மருத்துவக்குணங்கள் நிறைந்த சீதாப்பழத்தில் மில்க் ஷேக் செய்முறை

சென்னை: அருமையான மருத்துவக்குணங்கள் கொண்ட சீதாப்பழத்தில் மில்க் ஷேக் செய்து பாருங்கள். ருசியில் மயங்கி போய் விடுவீர்கள்.

தேவையான பொருட்கள்:

சீதாப்பழம் – 4
வெண்ணிலா பவுடர் – 2 ஸ்பூன்
குளிர்ந்த பால் – 2 கப்
அச்சு வெல்லம் – 3 ஸ்பூன்
சாக்லெட் தூள் – 1 ஸ்பூன்
ஐஸ் கியூப்ஸ் – சிறிதளவு

cheetah,milkshake,vanilla powder,jaggery,milk ,சீதாப்பழம், மில்க் ஷேக், வெண்ணிலா பவுடர், அச்சு வெல்லம், பால்

செய்முறை: முதலில் சீத்தாப்பழத்தை எடுத்து தோல், விதைகளை நீக்கி விடவும். பின்னர் சதை பகுதியை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.


அச்சு வெல்லத்தை எடுத்து துண்டுகளாக்கி மிக்சிஜாரில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு அடுப்பில் கடாயை வைத்து, அதில் பாலை ஊற்றி நன்கு காய்ச்சி இறக்கி, ஆற வைத்து பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும்.

பிறகு மிக்சிஜாரில் விதை நீக்கிய சீதாப்பழம், வெண்ணிலா பவுடர், குளிர வைத்த பால், பொடித்த அச்சு வெல்லம் போட்டு நன்கு அரைத்தபின், ஐஸ் கியூப்பை சேர்த்து மறுபடியும் அரைத்து எடுத்து கொள்ளவும். மேலும் அரைத்த ஜூஸை எடுத்து கண்ணாடி கிளாசில் ஊற்றி, அதன் மேல் சாக்லெட் தூளை தூவி பரிமாறினால் ருசியான சீதாப்பழ மில்க் ஷேக் ரெடி.

Tags :