Advertisement

மருத்துவக்குணம் நிறைந்த மணத்தக்காளி கீரை பொரியல்

By: Nagaraj Mon, 26 Dec 2022 10:53:30 PM

மருத்துவக்குணம் நிறைந்த மணத்தக்காளி கீரை பொரியல்

சென்னை: மருத்துவ குணம் நிறைந்த மணத்தக்காளி கீரையில் சுவையாக பொரியல் செய்யுங்கள்.


தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை – 1 கட்டு
சின்ன வெங்காயம் – 10
வரமிளகாய் – 4
பூண்டு – 2 பல்
சீரகம் – 2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணைய் – தேவைக்கேற்ப

manthakali,spinach,fries,cumin,garlic,onion ,மணத்தக்காளி, கீரை, பொரியல், சீரகம், பூண்டு, வெங்காயம்

செய்முறை: முதலில் ஒரு கடாயில்எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து, வெங்காயம், மிளகாய் மற்றும் பூண்டு போட்டு வதக்க வேண்டும். பின் இதனுடன் சுத்தம் செய்தகீரை மற்றும் சீரகத்தை போட்டு ,சிறிது தண்ணீர் தெளித்து மூடி வேக விட வேண்டும்.

கீரை நன்றாக வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையானமணத்தக்காளி கீரை பொரியல் தயார் !!!

Tags :
|
|
|