Advertisement

சுவையான பால் பாயாசம் செய்வது எப்படி?

By: Monisha Sat, 10 Oct 2020 4:13:32 PM

சுவையான பால் பாயாசம் செய்வது எப்படி?

இனிப்பு உணவுகளை பொதுவாக அனைவரும் விரும்புவர். இன்று நாம் சுவையான பால் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
1 லிட்டர் பால்
100 கி பாஸ்மதி அரிசி
50 கி சர்க்கரை
50 கி வெல்லம்
20 கி முந்திரி, வறுத்தது
அரை தேக்கரண்டி ஏலக்காய் பொடி
10 பாதாம், நறுக்கியது

milk payasam,basmati rice,sugar,almonds ,பால் பாயாசம்,பாஸ்மதி அரிசி,சர்க்கரை,பாதாம்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க விடவும். அதன் பிறகு தீயைக் குறைத்து, பால் கெட்டியாகும் வரை 45 நிமிடங்களுக்குத் தொடர்ந்து கிண்டி விடவும். அரிசி, சர்க்கரை மற்றும் வெல்லம் சேர்த்து, 15 நிமிடங்கள் குறைந்த தீயில் கொதி வேக விடவும். முந்திரிகள், ஏலக்காய் பொடி சேர்த்து, அரிசி நன்கு வேகும் வரை குறைந்த தீயில் வேக விடவும். தீயில் இருந்து அகற்றி, குளிர விட்டு, ஃப்ரிட்ஜில் வைக்கவும். பாதாம் துண்டுகளால் அலங்கரித்து குளிர்ச்சியாகப் பறிமாறவும்.

Tags :
|