Advertisement

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முள்ளு முருங்கை இலை தோசை

By: Nagaraj Wed, 14 Sept 2022 11:16:19 PM

ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்க முள்ளு முருங்கை இலை தோசை

சென்னை: ஆரோக்கியம் முக்கியம் என்று நினைப்பவர்களுக்கு முள்ளு முருங்கை இலை தோசை செய்து சாப்பிடுவது நல்லது.


தேவையானவை: பச்சரிசி - 1 கப், முள்ளுமுருங்கை இலை - 6, பச்சை மிளகாய் - 2, மிளகு - 10, சீரகம் -அரை டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் + நெய் - தேவையான அளவு, சின்ன வெங்காயம் - 10

green chillies,salt,pepper,cumin,moringa leaves,rice ,பச்சை மிளகாய், உப்பு, மிளகு, சீரகம், முள்ளு முருங்கை இலை, அரிசி

செய்முறை: அரிசியைக் கழுவி, 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.முள்ளுமுருங்கை இலையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாய், உப்பு, மிளகு, சீரகம்,இலை, அரிசி ஆகியவற்றை நன்கு ஆட்டவும்.

பின் அத்துடன் வெங்காயத்தை போட்டு கலக்கவும். பின்மெல்லிய ஊத்தப்பம் போல் ஊற்றி, சுற்றிவர நெய் விட்டு வேகவைத்து பின் திருப்பிவிட்டு அதே மாதிரிஎண்ணெய் + நெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும்.

Tags :
|
|
|