Advertisement

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் முருங்கைக்கீரை சாதம்

By: Nagaraj Fri, 16 June 2023 11:15:08 PM

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் முருங்கைக்கீரை சாதம்

சென்னை: உடல் ஆரோக்கியத்திற்கு முருங்கைக் கீரை சாதம் மிகவும் உதவும். இதை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

முருங்கைக்கீரை, அரைக்கீரை, முளைக்கீரை போன்ற எந்த கீரையை பயன்படுத்தியும் சுவையான, சத்தான சாதம் கலக்கலாம். கீரையை விரும்பாத குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் ருசித்து சாப்பிடுவார்கள்.

தேவையானவை:முருங்கைக்கீரை சிறு கட்டு -1அரிசி ஒரு ஆழாக்குதக்காளி- 1வெங்காயம் -2உப்பு தேவையான அளவுமஞ்சள் தூள் 1/2 ஸ்பூன்தனியாத்தூள் ஒரு ஸ்பூன்மிளகாய் தூள் அரை ஸ்பூன்எலுமிச்சை சாறு ஒரு மூடிநல்லெண்ணெய்

தாளிக்க

நெய் 2 ஸ்பூன்கடுகு ஒரு ஸ்பூன்கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்உளுத்தம் பருப்பு -1/2 ஸ்பூன்பச்சை மிளகாய் - 2

iron,spinach,rice,health,nutrients ,இரும்புச்சத்து, முருங்கைக்கீரை, சாதம், ஆரோக்கியம், சத்துக்கள்

செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்து காம்புகள், சிறு குச்சிகளை நீக்கி நன்கு தண்ணீரில் அலசி பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் நல்லெண்ணெய் ரெண்டு ஸ்பூன் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை தாளித்து கடுகு நன்கு வெடித்ததும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளியையும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

வெங்காயம் கலர் மாறி கண்ணாடி போல் வந்ததும் நறுக்கி வைத்துள்ள முருங்கை இலை கீரையை சேர்த்து தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு கை தண்ணீர் தெளித்து கிளறி விடவும். தட்டை போட்டு மூடாமல் வதக்கினால் கீரை கலர் மாறாமல் பச்சை பசேல் என்று இருக்கும்.

கீரை நன்கு வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி உதிர் உதிராக வடித்த சாதம் சேர்த்து கிளறவும். இப்பொழுது தனியா தூள் ஒரு ஸ்பூன், மிளகாய் தூள் அரை ஸ்பூன், எலுமிச்சம் பழம் ஒரு மூடி பிழிந்து நன்கு கலந்து பரிமாற சுவையான, மிகவும் சத்தான கீரை சாதம் ரெடி. தொட்டுக்கொள்ள அப்பளம் அல்லது தயிர் பச்சடி தோதாக இருக்கும்.

Tags :
|
|
|