Advertisement

அருமையான மாலை நேர டிபனுக்கு புழுங்கலரிசி ஆவி உருண்டை

By: Nagaraj Sun, 05 June 2022 2:50:04 PM

அருமையான மாலை நேர டிபனுக்கு புழுங்கலரிசி ஆவி உருண்டை

சென்னை: எப்போதும் ஆவியில் வேக வைக்கும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆகி விடும். உடலுக்கும் ஊட்டச்சத்துக்களை அளிக்கும். அந்த வகையில் புழுங்கலரிசி ஆவி உருண்டை செய்வது பற்றி பார்ப்போம்.

தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், தேங்காய் துருவல் - கால் கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க: கடுகு - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, பெருங் காயத்தூள் - கால் டீஸ்பூன்.

mustard,lentils,chickpeas,dried chillies,eggplant,curry leaves ,கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை

செய்முறை: புழுங்கலரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக் கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளிக்க வேண்டும்.

அதனுடன் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து கை விடாமல் நன்கு கிளறவும். மாவு வாணலியில் ஒட்டாமல் பந்து போல வரும் சமயம் தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

மாவு சற்று ஆறியதும் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைக்கலாம். மாவை உருட்டி உள்ளங்கையில் வைத்து வடை போல தட்டி, இட்லித்தட்டில் வேகவிட்டும் எடுக்கலாம்.

Tags :