Advertisement

அசைவ பிரியர்களுக்காக கிராமத்து சுவையில் மட்டன் சுக்கா கிரேவி செய்முறை

By: Nagaraj Wed, 11 Nov 2020 10:06:24 PM

அசைவ பிரியர்களுக்காக கிராமத்து சுவையில் மட்டன் சுக்கா கிரேவி செய்முறை

விடுமுறை நாள் என்றால் எல்லோருமே வாய்க்கு ருசியான அசைவம் சாப்பிட விரும்புவார்கள்.அதிலும் பெரும்பாலான ஆண்கள் மதியச் சாப்பாட்டை நன்கு ஒரு பிடி, பிடித்து விட்டு சுமார் 2 மணி நேரம் தூங்கி எழ வேண்டும் என நினைப்பார்கள். இது உடல் சோர்வை தணிப்பதோடு, புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.

மனித உடலுக்குத் தேவையான எல்லா நல்ல சத்துக்களும் ஆட்டுக்கறியில் உள்ளது. ஆகவே உங்கள் குடும்பத்தாருக்கு மதிய சாதத்தோடு மட்டன் சுக்கா கிரேவி சமைத்துக் கொடுத்து அசத்துங்கள்.

தேவையானவை: மட்டன் 1/2 கிலோ, பல்லாரி1, தக்காளி 3, புதினா இலை 1 கப், பெருஞ் சீரகம் 1 தேக்கரண்டி, சீரகம் 2 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, எண்ணெய்- தேவைக்கு, இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 மேஜைகரண்டி, தயிர் 2 மேஜைகரண்டி, வத்தல் தூள் 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் 2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி, லெமன் ஜூஸ் 1 தேக்கரண்டி, உப்பு - தேவைக்கு, மல்லி இலை சிறிதளவு

mutton sukkah,garam masala,lemon juice,oil ,மட்டன் சுக்கா, கரம் மசாலா, லெமன் ஜூஸ், எண்ணெய்

செய்முறை: பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் மிளகு இவற்றை கொறுகொறுப்பாக பவுடர் ஆக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து எண்ணெய் நன்கு பிரிந்து வரும் அளவிற்கு வதக்கவும்.

பின் மட்டன், 2 மே.கரண்டி தயிர், தனி வத்தல் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு, புதினா இலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி 4 விசில் போட்டு பின் 2 அல்லது 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
பிரை பேனில் 3 மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி வேக வைத்ததை அதில் சேர்த்து தண்ணீரை நன்கு வற்ற வைக்கவும். பின் பவுடர் செய்து வைத்ததை இதில் சேர்த்து கிளறவும். கரம் மசாலா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கிளற மல்லி இலை தூவி இறக்கவும். சுவையான மட்டன் சுக்கா தயார். தேவைக்கு தகுந்தவாறு தண்ணீரை வற்ற வைத்துக் கொள்ளவும்.

Tags :