Advertisement

உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகள் அளிக்கும் வேப்பம்பூ துவையல்

By: Nagaraj Thu, 15 Sept 2022 10:08:28 AM

உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகள் அளிக்கும் வேப்பம்பூ துவையல்

சென்னை: உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் நன்மைகள் அளிக்கும் வேப்பம்பூ துவையல் செய்முறை உங்களுக்காக.

தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 1 கைப்பிடி அளவு
கடுகு - அரை தேக்கரண்டி ‌
உளுத்தம்‌பருப்பு - 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய்‌- 2
புளி - நெல்லிக்காய்‌அளவு
பொடித்த வெல்லம்‌- 1 தேக்கரண்டி,
தேங்காய்த்‌துருவல்‌- 1 கிண்ணம்
பூண்டுப்‌பல்‌- 8
உப்பு, எண்ணெய்‌- தேவைக்கேற்ப

neem,mustard,urad dal,dry chillies ,வேப்பம்பூ, கடுகு, உளுத்தம்‌பருப்பு,
காய்ந்த மிளகாய்‌

செய்முறை: வாணலியில்‌ சிறிது எண்ணெய்‌விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, காய்ந்த மிளகாயைச்‌ சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்‌. பின்‌அதே வாணலியை அடுப்பில்‌வைத்து தீயைக்‌குறைத்து, சிறிதளவு எண்ணெயில் வேப்பம்‌பூவை வறுத்து அடுப்பை அணைக்கவும்‌.

இனி வறுத்து வைத்திருப்பவைகளுடன்‌ புளி, வெல்லம்‌, தேங்காய்த்‌ துருவல்‌, பூண்டுப்‌பல் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ‌உப்பு சேர்த்து மிக்ஸியில்‌ அரைத்துக்‌ கொள்ளவும்‌. சுவையான வேப்பம்பூ துவையல் தயார். சாதத்தில்‌ சேர்த்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும்‌ தொட்டுக்‌கொள்ளலாம்‌. குழந்தைகளின் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

பலன்கள்: வேப்பம் பூவுக்கு ஜீரணத்தை அதிகரிக்கும் சக்தி உண்டு. வாரத்தில் இருமுறை வேப்பம் பூ உணவில் சேர்த்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிவதோடு மீண்டும் பூச்சிகள் வயிற்றில் சேராமல் தடுக்கும் சக்தி வேப்பம்பூ துவையலுக்கு உண்டு.

Tags :
|