Advertisement

நேந்திரங்காய் பொடிமாஸ் செய்முறை உங்களுக்காக!!!

By: Nagaraj Wed, 13 July 2022 4:11:08 PM

நேந்திரங்காய் பொடிமாஸ் செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: நேந்திரங்காய் அல்லது பழம். இது கேரளா மாநிலத்தில் அதிகமாக விளைச்சல் தரக்கூடிய ஒரு பழ வகை. இதை காய வைத்தோ அல்லது சமைத்த பக்குவத்திலோ குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ள தகுதியான ஒரு சத்து மிகுந்த உணவு. இது சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம்.

தேவையானவை:வாழைக்காய்-2வெங்காயம் பொடியாக நறுக்கியது -1 (பெரியது). இது பொடிமஸுக்கு சுவை கூட்டும்.இஞ்சி-1 அங்குலம் தோல் சீவி,பொடியாக நறுக்கியதுதேங்காய் துருவல்-1 மேஜைக்கரண்டிகறிவேப்பிலை-5பச்சைமிளகாய்-1மிளகுத்தூள்-1/4 தேக்கரண்டிஉப்பு சுவைக்கேற்ப

தாளிக்க:
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி,கடுகு-1/2 தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு-1/2 தேக்கரண்டிசீரகம்-1/4 தேக்கரண்டி

coconut,grated coconut,curry leaves,green chillies,paprika ,நேந்திரங்காய், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், மிளகுத்தூள்

செய்முறை: நேந்திரம் காயை ஆவியில் 5 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும், சூடு ஆறியபின் தோல் உரித்து உதிர்த்தோ, அல்லது துருவியோ வைத்துக்கொள்ளலாம். பிறகு, வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிதம் செய்து, அரிந்து வைத்துள்ள வெங்காயம் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.

சற்று வெந்ததும், கறிவேப்பிலை சேர்த்து உதிர்த்த நேந்திரம் காய் சேர்த்து உப்பு தூவி கிளறி விடவும். மிதமான தீயில் 3 முதல் 5 நிமிடம் மூடிவைத்து ஒன்று சேர்த்து வேகவிடவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இது வறுவலாக புட்டு பதத்திற்கு இருக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி வைப்பதிற்கு முன்பாக மிளகுத்தூள், துருவிய தேங்காய், கொத்தமல்லி சேர்த்து கிளறி இறக்கவும். சுவையும் மனமும் பிரமாதமாக இருக்கும். தயிர் அல்லது ரசம் சாதத்துடன் நேந்திரங்காய் பொடிமாஸ் அசத்தலாக இருக்கும்.

Tags :