Advertisement

  • வீடு
  • சமையல் குறிப்புகள்
  • இனி இட்லிக்கு சாம்பார் செய்யும் போது இந்த காய் சேர்த்து சாம்பார் வச்சு பாருங்க சூப்பரா இருக்கும்

இனி இட்லிக்கு சாம்பார் செய்யும் போது இந்த காய் சேர்த்து சாம்பார் வச்சு பாருங்க சூப்பரா இருக்கும்

By: vaithegi Thu, 07 Sept 2023 6:02:44 PM

இனி இட்லிக்கு சாம்பார் செய்யும் போது இந்த காய் சேர்த்து சாம்பார் வச்சு பாருங்க சூப்பரா இருக்கும்

இட்லி, தோசை சாதம் என எல்லாவற்றிற்கும் பொருந்தக்கூடிய ஒரு சுவையான சாம்பார் அதுவும் மிகவும் சுலபமாகவும் டேஸ்டாகவும் செய்ய இந்த ஒரு காயை அதில் சேர்த்தாலே போதும் சாம்பாரின் சுவை அட்டகாசமாக இருக்கும்.

பீர்க்கங்காய் சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 1, துவரம் பருப்பு – கால் கப், வெங்காயம் -1, பூண்டு பல் -10, பச்சை மிளகாய் – 5, தக்காளி – 4, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன், கடுகு -1 டீஸ்பூன், வெந்தயம் -1/4 டீஸ்பூன் , கருவேப்பிலை -1 கொத்து, காய்ந்த மிளகாய் -2, உப்பு -1/2 ஸ்பூன்.

sambar,italian ,சாம்பார் ,இட்லி

செய்முறை :
இந்த சாம்பார் செய்ய முதலில் பீர்க்கங்காயை நன்றாக தோல் சீவி சுத்தம் செய்து ஒரு கப் அளவிற்கு வரும் படி சின்னதாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து மீடியம் சைஸ் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள் அதே போன்று பூண்டை தோல் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது சாம்பார் தாளித்து விடுவோம். குக்கரில் துவரம்பருப்பு சேர்த்து நன்றாக அலசி எடுத்துக் கொள்ளுங்கள் அதன் பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு, பீர்க்கங்காய் சேர்த்த பிறகு நான்கு மீடியம் சைஸ் பழுத்த தக்காளியை அறிந்து அதையும் குக்கரில் சேர்த்து விடுங்கள். அடுத்து மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, சேர்த்த பிறகு ரெண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து விடுங்கள் 3 விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

விசில் முழுவதுமாக இறங்கிய பிறகு பருப்பு காய் அனைத்தையும் நன்றாக வசித்து விடுங்கள் இதுக்கு மத்து அல்லது மேஷர் இருந்தால் பயன்படுத்தி வசித்துக் கொள்ளுங்கள் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைக்க வேண்டாம் சாம்பார் ருசி மாறி விடும். இப்போது இந்த சாம்பாருக்கு ஒரு தாளிப்பை தயார் செய்து விடுவோம் அதற்கு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கடுகு, வெந்தயம், சேர்த்து புரிந்த பிறகு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு அடுப்பை அணைத்து விட்டு 1 கொத்து கருவேப்பிலையும் சேர்த்த பிறகு இந்த தாளிப்பை சாம்பாரில் ஊற்றி கலந்து விடுங்கள்.நல்ல கமகமவென்று வாசத்துடன் பீர்க்கங்காய் சாம்பார் தயாராகிவிட்டது

Tags :
|