Advertisement

அபார ருசியில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை

By: Nagaraj Sun, 30 Aug 2020 12:48:47 PM

அபார ருசியில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்முறை

அசத்தல் சுவையில் எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

கத்திரிக்காய்-200கிராம்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
கருவேப்பிலை- 10
உளுந்தம் பருப்பு-1/2 டீஸ்பூ
வெந்தயம்-1/4ஸ்பூன்
சின்ன வெங்காயம்-10
பெரியவெங்காயம்-3
தக்காளி-4
மிளகாய் தூள்-2டீஸ்பூன்
மல்லித்தூள்- 1 டீஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
மஞ்சள் தூள்-1/2டீஸ்பூன்
புளி-தேவையான அளவு
தேங்காய்-1/4மூடி
கொத்தமல்லி-சிறிது

eggplant,coconut paste,turmeric powder,tomatoes ,கத்திரிக்காய், தேங்காய் விழுது, மஞ்சள் தூள், தக்காளி

செய்முறை; ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்த பின்பு அதில் வெங்காயம், சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும்.

வதக்கிய பின்பு அதில் தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு கத்தரிக்காய்களை மேலாக காம்பை மட்டும் நறுக்கி விட்டு, போட்டு வதக்கி கொள்ளவும்,பின்பு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் போட்டு வதக்கி கொள்ளவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து கிளறி விடவும். தண்ணீரும் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு, கரைத்து வைத்த புளித் தண்ணீரை ஊற்றி சுண்டும் வரை கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கவும். அருமையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு ரெடி.

Tags :