Advertisement

நெல்லை ஸ்பெஷல் மடக்கு பணியாரம் செய்முறை

By: Nagaraj Tue, 13 Sept 2022 10:25:10 AM

நெல்லை ஸ்பெஷல் மடக்கு பணியாரம் செய்முறை

சென்னை: நெல்லை ஸ்பெஷல் மடக்கு பணியாரம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை

அரிசி மாவு – 2 கப்
முட்டை – 2
சர்க்கரை – 4 டீஸ்பூன்
நெய் – 3 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – அரை கப்

wrapping process,ready,ghee,eggs,sugar,coconut milk ,மடக்கு பணியாரம், தயார், நெய், முட்டை, சர்க்கரை, தேங்காய் பால்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் சர்க்கரை சேர்த்து நுரை வரும் வரை நன்கு கலந்து கொள்ளவும். அத்துடன் அரிசி மாவு சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பிறகு நெய்யை நன்கு சூடுபடுத்தி மாவின் மேல் ஊற்றவும்.

கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு வந்தபின் அதில் சிறிது சிறிதாக தேங்காய் பாலை சேர்த்து மாவை 15 நிமிடங்கள் நன்கு அழுத்தம் கொடுத்து கெட்டியாக பிசைய வேண்டும். அரை மணிநேரம் மாவை அப்படியே வைத்திருந்து மீண்டும் 5 நிமிடங்கள் மாவை பிசைய வேண்டும்.

இப்போது மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும், உள்ளங்கையில் எண்ணெய் அல்லது நெய் தேய்த்து உருட்டிய மாவை கொழுக்கட்டைக்கு தட்டுவது போல் வட்டமாக தட்டவும். வட்டமாக தட்டிய மாவை சுருள் போன்று உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மொறுமொறுப்பான மடக்கு பணியாரம் தயார்.

Tags :
|
|
|
|