Advertisement

சப்புக்கொட்டி சாப்பிட செய்யும் பனீர் முந்திரி கிரேவி செய்முறை

By: Nagaraj Thu, 26 Nov 2020 9:01:18 PM

சப்புக்கொட்டி சாப்பிட செய்யும் பனீர் முந்திரி கிரேவி செய்முறை

பால் பொருட்களில் ஒன்றான பனீரைக் கொண்டு பல ரெசிபிக்கள் செய்யலாம். அதில் பலரும் விரும்பி சாப்பிடும் ஒன்று என்றால் அது பனீர் பட்டர் மசாலா தான். இதை விட அற்புதமான ஒரு பனீர் ரெசிபி ஒன்று உள்ளது. அது தான் பனீர் முந்திரி கிரேவி. இது சப்பாத்தி அல்லது ரொட்டிக்கு அட்டகாசமாக இருக்கும். மேலும் செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:


பனீர் - 200 கிராம் (துண்டுகளாக்கவும்)
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய கீரை இலைகள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
சர்க்கரை - 1 டீஸ்பூன் அல்லது சுவைக்கேற்ப

அரைப்பதற்கு...

தக்காளி - 4 (நறுக்கியது)
முந்திரி - 15
இஞ்சி - 2 இன்ச்
வரமிளகாய் - 4-5

paneer,garam masala,dried dill lettuce leaf,fennel ,பனீர், கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை இலை, கருஞ்சீரகம்

செய்முறை: முதலில் ஒரு வாணலியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி, அடுப்பில் வைத்து மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.

பொருட்கள் நன்கு வெந்ததும், அதை இறக்கி, குளிர வைத்து, பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருஞ்சீரகத்தைப் போட்டு தாளிக்கவும். பின்பு அரைத்த மசாலாவை ஊற்றி, கிரேவிக்கு தேவையான அளவு நீர் மற்றும் உப்பு, சர்க்கரை சேர்த்து கிளறி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

கிரேவி நன்கு கொதித்து ஓரளவு கெட்டியாகும் போது, கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை இலைகளை சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியில் பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் முந்திரி கிரேவி தயார்!

Tags :
|