Advertisement

வீட்டிலேயே எளிய முறையில் பனீர் கட்லெட் செய்யலாம்

By: Nagaraj Sat, 25 June 2022 10:32:37 AM

வீட்டிலேயே எளிய முறையில் பனீர் கட்லெட் செய்யலாம்

சென்னை: குழந்தைகள் விரும்பி சாப்பிட வீட்டிலேயே எளிய முறையில் பனீர் கட்லெட் செய்து தாருங்கள். அதன் செய்முறை இதோ.

தேவையான பொருள்கள் -

பனீர் - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 1
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
மல்லித்தழை - சிறிது
பிரட் தூள் - 1/2 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

flavor,paneer,cutlet,bread powder,turmeric powder,salt ,சுவை, பனீர், கட்லெட், பிரட் தூள், மஞ்சள் தூள், உப்பு

செய்முறை: பனீரை துருவிக்கொள்ளவும். வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும். உருளைக்கிழங்கை தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் துருவி வைத்துள்ள பனீர், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ,மல்லித்தழை, பச்சை மிளகாய் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தும் எடுக்கவும். இரு புறமும் நல்ல பொன்னிறமானதும் எடுத்து விடவும். எல்லா கட்லெட்களையும் இதே முறையில் செய்யவும். இந்த அளவுக்கு 12 கட்லெட்கள் வரை வரும். சுவையான கட்லெட் ரெடி. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Tags :
|
|
|